தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த கதாநாயகிகளில் லட்சுமி மேனனும் ஒருவர். ‘கும்கி’ மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், ’சுந்தர பாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘குட்டி புலி’, ‘கொம்பன்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
இதற்கிடையே, கிராமத்து கதைகளுக்கு மட்டுமே லட்சுமி மேனன் பொருந்துவார், என்ற இமேஜ் உருவானதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. போதா குறையாக அஜித்துக்கு தங்கையாக நடித்தவருக்கு தொடர்ந்து தங்கை வேடங்கள் தேடி வர, கடுப்பானவர், சினிமாவே வேண்டாம், என்று தனது படிப்பை தொடர கேரளா சென்றுவிட்டார்.
கேரளாவில் படித்துக் கொண்டே நடனத்திலும் கவனம் செலுத்தியவர், அப்படியே தனது உடல் எடையையும் குறைக்க தொடங்கினார். அதன்படி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான லட்சுமி மேனன், தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மீண்டும் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
அதன்படி, ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், கருனாஸுடன் லட்சுமி மேனன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதோடு, கருணாஸின் ’திண்டுக்கல் சாரதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் லட்சுமி மேன ஹீரோயினாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதை மறுத்திருக்கும் லட்சுமி மேனன், ‘கொம்பன்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, கருணாஸுக்கு தான் ஜோடியாக நடிப்பதாக வதந்தி பரப்புகிறார்கள், என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...