தனுஷின் ‘மாரி 2’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டொவினோ தாமஸ். அப்படத்தில் வில்லனாக நடித்தவர், ‘அபியும் அனுவும்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் டொவினோ தாமஸ் தற்போது ‘கால’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சண்டைக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்ட போது, அதில் ஏற்பட்ட விபத்தில் டொவினோ தாமஸுக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டொவினோ தாமஸின் வயிற்றின் உட்பகுதியில் நுரையீரல் அருகே ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...