பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி பெரும் பரபரப்போடு ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் முதல் சண்டைக்காரர்களாக சுரேஷ் சக்கரவர்த்தியும், அனிதா சம்பத்தும் திகழ்ந்தாலும், தற்போது இருவரும் சேர்ந்து ஆடிய குத்து டான்ஸ் மூலம் சமாதானம் ஆகிவிட்டார்கள்.
இதற்கிடையே, கடந்த மூன்று சீசன்களைப் போல நான்காவது சீசனிலும் காதல் நாடகம் அரங்கேற உள்ளது. அந்த காதல் ஜோடி யார்? என்பது விரைவில் தெரிய உள்ளது.
இந்த நிலையில், புதிய போட்டியாளராக நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். கடந்த பத்து நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதை ரகசிய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா, இன்றைய எப்பிசோட்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.
ஆனால், அவர் போட்டியாளரா அல்லது விருந்தாளியா, என்பது இதுவரை தெரியவில்லை. அவர் ஒருவேளை போட்டியாளராக இருந்தால், கடந்த 10 நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்தது தொடர்பாக பேசுவார், அதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் பெரும் ரகளை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...