நடிகர் முரளியின் மகனான அதர்வா, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பாலாவின் ‘பரதேசி’ மூலம் கோலிவுட்டின் வளரும் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அதர்வாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவை சேர்ந்த பெண் ஒருவரை அதர்வாக காதலித்து வருகிறாராம். பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்தவருக்கு தற்போது கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதால் தனது கோவா காதலியை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறாராம்.
அதர்வாவின் தம்பியான ஆகாஷுக்கும், விஜயின் உறவினரும், ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருமான பிரிட்டோ சேவியரின் மகள் சினேகா சேவியருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...