Latest News :

’பிக் பாஸ் 4’-ல் இப்படி ஒரு காதலா! - பற்றியது நெருப்பு
Saturday October-17 2020

தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் கடந்த 4 ஆம் தேதி தொடங்கினாலும், இதுவரை நிகழ்ச்சி சூடுபிடிக்கவில்லை. ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா இடையிலான மோதல் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் பிறகு அவர்கள் ஒன்றாக நடனம் ஆடி சமாதானம் ஆகிவிட்டதால், நிகழ்ச்சி சுப்பு சப்பில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

 

இதற்கிடையே, வைல்ட் கார்டு மூலம் புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர், ஷிவானியை தனிமைப்படுத்தியுள்ளார். தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் ஷிவானி தனிமைப்படுத்தப்பட்டதால் நிகழ்ச்சி சற்று சூடு பிடித்தாலும், மக்களை டிவி முன்பு உட்கார வைப்பதற்கான பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்களிடம் எளிதில் எடுத்துச் செல்லும் காதல் நாடகத்தை அரங்கேற்ற தயாரான நிகழ்ச்சி குழு, தற்போது நான்காவது சீசனுக்கான காதல் ஜோடியை தயார் செய்து விட்டார்கள்.

 

Balaji and Cabrilla

 

ஆம், மூன்றாவது சீசனில் எப்படி லொஸ்லியா - கவின் ஜோடியின் காதல் எப்பிசோட் பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல், நான்காவது சீசனில் கேப்ரில்லா - பாலாஜி ஆகியோரை காதல் ஜோடியாக்கி, நிகழ்ச்சியை நகர்த்த பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, கேப்ரில்லாவுக்கும், பாலாஜிக்கும் இடையிலான காதல் தீ பற்ற தொடங்கியுள்ளது. இனி, அடுத்தடுத்த எப்பிசோட்களில் இந்த தீ கொழுந்து விட்ட எரியப் போகிறது.

 

அதே சமயம், கேப்ரில்லாவும், ஆஜித்தும் இணைந்து நடனம் ஆடுவது போன்ற ஒரு டாஸ்க்கையும் பிக் பாஸ் கொடுத்திருக்கிறார். இதனால், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் வித்தியாசமான காதல் எப்பிசோட் அறங்கேறவும் வாய்ப்புண்டு, அதாவது முக்கோண காதல் நாடகம் அரங்கேறலாம்.

Related News

6990

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery