Latest News :

‘இரும்புத்திரை’ யை மிஞ்சிய ‘சக்ரா’! - மகிழ்ச்சியில் விஷால்
Saturday October-17 2020

விஷால் நடித்து, தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் ‘சக்ரா’. அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படத்தின் விளம்பரத்திற்காக ஹாலிவுட் சினிமாவில் பயன்படுத்தப்படும் உத்தியை விஷால் பயன்படுத்தி வருகிறார்.

 

அதாவது, படம் வெளியாவதற்கு முன்பாகவே பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கு படத்தை திரையிட்டுக் காட்டி அவர்களின் கருத்தைக் கேட்டு விளம்பரப்படுத்துவது ஹாலிவுட் சினிமாவில் வழக்கமாக நடைபெறும். ஆனால், இந்த உத்தியை தமிழ் சினிமாவில் முதன் முறையாக ‘இரும்புத்திரை’ படத்திற்கு விஷால் செய்தார். தற்போது அதே உத்தியை ‘சக்ரா’ படத்திற்கும் விஷால் செய்து வருகிறார்.

 

Chakra

 

இப்படிப் படம் பார்ப்பவர்களில் ஆட்டோக்காரர்கள் முதல் ஐடி வேலைப் பார்ப்பவர்கள் வரை பலரும் கலந்து இருப்பார்கள். இப்போது ’சக்ரா’ பட டெஸ்ட் ப்ரிவியூ ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

பல்வேறுபட்ட மக்களின் உணர்வுகளை அறியும் வெற்றிகரமான விளம்பர உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ள இந்த முறைப்படி, தற்போது ‘சக்ரா’ படத்தை பார்ப்பவர்கள், ‘இரும்புத்திரை’ படத்தை விட இப்படம் நன்றாக இருப்பதாக கருத்து கூறி வருகிறார்கள். இதனால் விஷால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Related News

6993

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...