Latest News :

3 வது கணவரை வீட்டை விட்டு விரட்டியடித்த வனிதா! - அதிர்ச்சியில் கோலிவுட்
Tuesday October-20 2020

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களிடம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார், என்று போலீசில் புகார் அளித்தார்.

 

இடையடுத்து, தனக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம், என்று விளக்கம் அளித்த வனிதா, பீட்டர் பாலுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை தனது வீட்டில் இருந்து விரட்டியடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த தகவலை பிர்பல தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தான் நன்றாக விசாரித்துவிட்டேன், பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டது உண்மை தான், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மூன்றாவது திருமணம் செய்துக் கொண்ட வனிதாவை பலர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததோடு, வனிதா மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ravindar Chandrasekar

Related News

6996

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...