தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘தெளலத்’ என்ற படத்தில் தான் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பதாகவும், ஆனால், அப்படக் குழு தன்னை முன்னிலைப்படுத்தி படத்தை விளம்பரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், அதனை மறுத்த தெளலத் படக்குழு, யோகி பாபுவவி மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை, படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தி தான் விளம்பரம் செய்கிறோம். படத்தில் யோகி பாபு நடித்திருப்பதால் அவரையும் போஸ்டரில் போட்டும். அதேபோல், யோகி பாபு எங்கள் மீது பொய்யாக புகார் கூறுகிறார், என்றும் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், சம்பள விஷயத்திலும் யோகி பாபு கரார் காட்டுவதாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கூறியதோடு, யோகி பாபு பிரபலமடையாத போது குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த படங்களுக்கு தற்போது டப்பிங் பேச அழைத்தால், கூடுதலாக பணம் கேட்பதாகவும், புகார்கள் எழுந்தனர்.
இப்படி யோகி பாபு மீது அவ்வபோது எழும் புகார்களுக்கு அவர் அவ்வபோது விளக்கம் அளித்து வருகிறார். அதில், ”நான் அப்படிப்பட்ட ஆள் இல்லங்க, நான் ரொம்ப நல்லவங்க...” என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், தனது சம்பள விஷயம் குறித்து எழும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த யோகி பாபு, “பெண் உதவி இயக்குநர் ஒருவர், என்னை ஹீரோவாக வைத்து கதை எழுதியிருப்பதாகவும், அந்த படத்தில் நான் நடித்துக் கொடுக்க வேண்டும், என்றும் கேட்டார். ஆனால், என்னிடம் பட்ஜெட் இல்லை சார், இந்த படம் பண்ணா தான் எனக்கு கல்யாணம் ஆகும் சார். என்றும் கூறினார். உடனே அவரிடம், சம்பளம் வாங்காமல் நான் நடித்துக் கொடுக்கிறேம்மா, உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும், என்று சொன்னேன். இந்த பெண் உதவி இயக்குநரிடம் மட்டும் அல்ல, பலரிடம் நான் சம்பள விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக் கொள்கிறேன். ஆனால், வெளியே என்னை பற்றி சம்பள விஷயத்தில் தவறாக பேசுகிறார்கள்.” என்று கூறினார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...