சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருந்த படம், இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதால், குறிப்பிட்ட தேதியில் வெளியாகமல் போனது.
இதையடுத்து, ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட கடிதத்தில், படத்தின் விமானப்படை சம்மந்தமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதோடு, இதுவரை பார்த்திராத இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த படம் மக்களை கவரக்கூடிய அம்சம் கொண்டது, இதன் ரிலீஸ் தள்ளிப்போனது எனக்கும் சற்று வலி ஏற்படுத்தும் விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றும் தெரிவித்திருந்தார்.
சூர்யாவின் இந்த கடித்தத்தால், அவரது படம் ரிலீஸ் ஆக கூடாது, என்று சிலர் சதி செவதாக தகவல் வெளியான நிலையில், இந்திய விமானப்படை தடையில்லா சான்றிதழை வழங்கிவிட்ட செய்தியை அறிவித்த சூர்யா, படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று வெளியான டிரைலருடன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, ‘சூரரைப் போற்று’ வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் முன்னரே படம் வெளியாகிறது.
மேலும், ‘சூரரைப் போற்று’ டிரைலரும் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தில் ஈடுபட்டிருக்கும் “வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா...” போன்ற வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்கிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...