தமிழ் திரையுலகில் முக்கியமான அமைப்பாகவும், பலம் வாய்ந்த அமைப்பாகவும் இருப்பது தயாரிப்பாளர்கள் சங்கம். திரைப்பட தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த இச்சங்கத்தில் ஒரு காலத்தில் வெறும் 170 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி-யின் முயற்சியினாலும், உழைப்பினாலும் 4000 உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக வளர்ந்ததோடு, தமிழ் சினிமாவின் முக்கிய சங்கமாகவும் உயர்ந்தது.
கே.ஆர்.ஜி-யை தொடர்ந்து இராம.நாராயணன் இச்சங்கத்திற்கு தலைவராக இருந்த போதும் சங்கத்திற்காக பல ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தார். மொத்தத்தில், தயாரிப்பாளர்கள் சங்க வரலாற்றில் கே.ஆர்.ஜி மற்றும் இராம.நாராயணன் ஆகியோர் தலைவர்களாக இருந்த காலமே பொற்காலம், என்று தயாரிப்பாளர்கள் பலர் இன்று வரை கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட சங்கம், தற்போது தனது பலத்தையும், நிதியையும் இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், தொழில்முறை தயாரிப்பாளர் அல்லாத நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலை வெற்றி பெற வைத்ததே தயாரிப்பாளர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ற கருத்து நிலவி வரும் நிலையில், தற்போதைய தேர்தலில் அப்படி ஒரு தவறை செய்து விடக்கூடாது, என்பதே தயாரிப்பாளர்களின் எண்ணம்.
அப்படி இருக்க, விஷாலைப் போல தொழில்முறை தயாரிப்பாளர் அல்லாத, நடிகர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே சமயம், தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்கால தலைவரான மறைந்த இராம.நாராயணைன் மகனும், பிரம்மாண்ட படங்களை தயாரித்துவருபவருமான ராமசாமி என்கிற டி.முரளியும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மூன்றாவதாக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இப்படி மூன்று பேர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாலும், வெற்றி வாய்ப்பு என்னவோ முரளி பக்கம் தான் இருக்கிறது, என்று தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டும் இன்றி, ”தயாரிப்பாளர்கள் நலன் காப்பேன் என கூறி வாக்கு கேட்கும் டி.ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசனையே படப்பிடிப்புக்கு ஒழுங்காக அனுப்ப முடியவில்லை, அதனால் பல தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர். இந்த நிலையில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருப்பவர் தயாரிப்பாளர்கள் சங்க பணிகளை எப்படி கவனிக்க முடியும். தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்களுக்கிடையே பிரச்சினை வந்தால் அவரால் எப்படி நேர்மையான முடிவு எடுக்க முடியும். அதனால் தான் ராமசாமி@முரளி தேர்தல் களத்தில் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார், என்றும் கூறுகிறார்கள்.
மொத்தத்தில், ”தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் சரிபட்டு வர மாட்டாரு” என்பது தான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் மைண்ட் மற்றும் வெளிப்படை வாய்ஸாக இருக்கிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...