விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ். திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி சுமார் 50 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இவரை, ‘தாரைதப்பட்டை’ படத்தில் இயக்குநர் பாலா வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
அப்படத்தில் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஆர்.கே.சுரேஷ், விஷாலின் ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்ட, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, உதயநிதியுடன் ஒரு படம், ‘ஹர ஹர மகாதேவகி’ என்று கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் வில்லன் நடிகரானதோடு, ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’, ‘தனிமுகன்’ உள்ளிட்ட 7 படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளரை சந்தித்த ஆர்.கே.சுரேஷ், தனது திருமணம் குறித்து அறிவித்தார்.
சுமங்கலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வரும் திவ்யாவை அவர் திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவ்யா, ஆர்.கே.சுரேஷின் உறவினராம். நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட இருவரும் நட்பாக பழக் பிறகு அதுவே காதலாக மாறியதாம்.
ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை, முடிவான பிறகு தேதியை அறிவிப்பதாக அவர் கூறினார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...