கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக் பாஸ் சீசன் 4 தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களிடம் அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருவதோடு குரூப்பிஸமும் உருவாக தொடங்கியுள்ளது. ஆனால், சண்டைபோடும் போட்டியாளர்கள் அடுத்த நாளே சமாதனமாகிவிடுவதோடு, வேறு ஒரு போட்டியாளருடன் சண்டை போடுவதால், நிகழ்ச்சியில் பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் தற்போட்து 54 நாட்களை கடந்திருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவியிருப்பதாகவும், அதனால் போட்டியாளர்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸில் இருந்து கங்கவா என்ற போட்டியாளர் உடல் நலக்குறைவால் வெளியேற நிலையில், நேற்று நோயல் சீன் என்ற மற்றொரு போட்டியாளரும் உடல் நலக்குறைவால் வெளியேறியுள்ளார். இப்படி போட்டியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதால் பிக் பாஸ் வீட்டில் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்ற பீதி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வெளியேறிய இரண்டு போட்டியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை, என்று பிக் பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே சமயம், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்தினாலும், அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.
இதனால், தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ, என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் களப்ப, அது தற்போது தீயாக பரவி வருகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...