நடிகர், நடிகைகள் தங்களது உடல் எடையை அவ்வபோது அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து வருகிறார்கள். இதற்காக முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை கடைபிடித்தாலும், சிலர் மருத்துவ ரீதியாகவும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், சிலருக்கு பின் விளைவுகள் ஏற்பட்டு பாதிப்பும் அடைகிறார்கள்.
அந்த வகையில், எந்தவித உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை கடைபிடிக்காமலேயே பிரபல நடிகையான காவேரியின் உடல் எடை திடீரென்று குறைந்துவிட்டதாகவும். அதனால், அவர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் அனுமதியானதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான காவேரி, தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும், பல படங்களை தங்கை உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு தாவினார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சீரியல் உலகில் பிரபலமடைந்தவர், தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், இந்நிலையில் சமீபத்தில் நடந்த மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு காவேரி வந்து உள்ளார். இவரை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடல் மெலிந்து ஆளே மாறிப்போன நிலையில் இருந்தார்.
மேலும், எந்தவித உடற்பயிற்சியும், உணவு முறையும் கடைபிடிக்காமல் அவரது உடல் எடை திடீரென்று குறைந்து விட்டதாம். ரொம்ப ஒல்லியாகிக் கொண்டே போனதால் தனது உடலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது, என்று பயந்த நடிகை காவேரி, உடனே மருத்துவமனை ஒன்றில் அட்மிட்டாகி பரிசோதனை செய்துக் கொண்டாராம்.
ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, என்று கூறிவிட்டார்களாம். இருப்பினும், காவேரி உடல் எடை குறைந்த ஆளே மாறிப்போனதோடு, பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்.
இதோ அவரது புகைப்படம்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...