ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீஸுக்கு முன்பாகவே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மாளவிகா மோகனன், தற்போது தனுஷின் 43 வது திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கும் மாளவிகா மோகன், கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருவதோடு, முன்னணி ஹீரோக்களும் அவரை நாயகியாக தேர்வு செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இப்படி எடுத்த எடுப்பிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் மாளவிகா மோகனன் கமிட்டாவதற்கு காரணம், அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படங்களை விட தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தான் மாளவிகா மோகனன் அதிகமாக நம்பியிருக்கிறார். அவர் அவ்வபோது தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா பிரபலங்களையும் ஈர்த்து வருகிறார்.
மேலும், தனுஷுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பது தான் தனது ஆசை, என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபனாக கூறியிருந்தார். அவரது இந்த ஓபன் டைப்புக்கு தான் தனுஷும் அவரை தனது 43 வது படத்தில் கதாநாயகியாக டிக் அடித்துள்ளார்.
மொத்தத்தில், உடையாக இருந்தாலும் சரி, பேச்சாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஓபனாக இருப்பதால் தான் மாளவிகா மோகனனுக்கு தனுஷ் பட வாய்ப்பு கிடைத்ததாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...