தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வரும் திரிஷாவின் முன்னாள் காதலர் மீது சென்னை கிண்டி காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் என்பவரும் திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் நின்றுபோனது.
இந்த நிலையில், சென்னையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் வருண் மணியனிடம், நிலம் வாங்க வெங்கடேசன் என்பவர் ரூ.4 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் முழு தொகையை கொடுப்பதற்குள் வருண் மணியன், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வெங்கடேசன் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகை ரூ.4 லட்சத்தை திருப்பி கேட்டபோது, வருண் மணியன் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வெங்கடேசன் கிண்டி காவல் நிலையத்தில் வருண் மணியம் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பண மோசடி, கொலை மிரட்டல், ஏமாற்றுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...