பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழக மக்களிடம் பிரபலமான நடிகை வனிதா, பீட்டர் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். வனிதா ஏற்கனவே இரண்டு திருமணமாகி முறையாக விவாகரத்து பெற்றாலும், அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பால், தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை. இதனால், பீட்டர் பாலின் மனைவி வனிதா மீது புகார் அளிக்க, அதற்கு வனிதா பீட்டர் பாலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறவில்லை. அது அன்பின் பரிமாற்ற நிகழ்வு என்று கூறினார்.
மேலும், வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி பிரபலங்கள் பலர் விமர்சித்தாலும், அனைவரையும் எதிர்த்து நின்றவர் பீட்டர் பாலுடன் சந்தோஷமாக வாழ தொடங்கினார். ஆனால், அவரது சந்தோஷம் அனைத்தும் பீட்டர் பாலின் இறந்தநாள் வரை தான் இருந்தது. பீட்டர் பால் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றவர், அங்கு பீட்டர் பால் தொடர்ந்து மது குடித்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைபோட்டார்.
இதையடுத்து, இருவருக்குமான சண்டை அதிகரிக்க, பீட்டர் பாலும் தொடர்ந்து மது அருந்த பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்பட்டது. பீட்டர் பாலுக்கும், தனக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டத்தை வனிதா ஒப்புக் கொண்டதோடு, அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும் கூறினார். தற்போது பீட்டர் பால் எந்த நேரமும் மது போதையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வனிதா தொடங்கிய யுடியுப் சேனலுக்கான பிராபிக்ஸ், எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகளை செய்ததன் மூலம் தான் பீட்டர் பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு, பிறகு அது காதலாக மலர்ந்தது. ஆனால், பீட்டர் பாலை வனிதா பிரிந்த நிலையிலும், அவர் தொடர்ந்து தனது யுடியுப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பீட்டர் பாலை பிரிந்த வனிதாவின் யுடியுப் சேனலின் பணிகளை தற்போது யார் செய்வது? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான பதிலையும் வனிதாவே சமீபத்தில் தெரிவித்துள்ளார். பலரின் யுடியுப் சேனலை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் வனிதா இணைந்து விட்டாராம். அவர்கள் தான் வனிதாவின் யுடியுப் சேனலுக்கான வீடியோவின் எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார்களாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...