நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ தீபாவளி பண்டிகையன்று ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகப் போகிறது. இப்படத்தையடுத்து ‘நெற்றிக்கண்’ படத்தையும் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நயன்தாராவும், அவரது காதலரும் அப்படத்தின் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுக்காக வாய்ப்பு தேடும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 65 வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிவிட, புதிய இயக்குநராக ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சனை விஜய் தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு ஏற்ற கதை ஒன்றை விக்னேஷ் சிவன் வைத்திருப்பதாக, விஜயிடம் கூறிய நயன்தாரா, விஜயின் 65 வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுக்குமாறும், விஜயிடம் கேட்டாராம். ஆனால், விக்னேஷ் சிவனின் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், நயன்தாராவின் கோரிக்கையை விஜய் நிராகரித்து விட்டாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...