தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தனது ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், அவர் படங்கள் ரிலீஸின் போது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது, என்று பட்டையை கிளப்பி விடுவார்கள். அதேபோல், தான் எந்த நிலையிலும் அரசியலில் நுழைய மாட்டேன், என்று அஜித் அடிக்கடி சொல்லி வந்தாலும், அவ்வபோது அஜித்தின் பெயர் அரசியல் பக்கம் அடிபட்டு பரபரப்பை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், அஜித் அதிமுக-வுக்கு ஆதரவு அளித்தார், என்று பிரபல நடிகரான ஆனந்தராஜ், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஆனந்தராஜ், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தவர், அதிமுக தலைமைக்கும் சில கோரிக்கைகள் வைத்தார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக கூறிய அவர், தேர்தலின் போது ஜெயலலிதா தலைமயிலான அதிமுக-வுக்கு விஜய் ஆதரவு அளித்தது போல, அஜித்தும் ஆதரவு அளித்தார், என்று தெரிவித்தார்.
இதுவரை அதிகாரப்பூர்வமாக அஜித் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆனந்தராஜ் இப்படி கூறியிருப்பது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ ஆனந்தராஜின் வீடியோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...