Latest News :

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை மிஸ் பண்ணிடாதீங்க - ஏன் தெரியுமா?
Wednesday November-11 2020

சூர்யா நடிப்பில், ‘இறுதிச் சுற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாயாரித்துள்ள இப்படம் தீபாவளி ரிலீஸாக வரும் 12 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸாகிறது.

 

ஆரம்பம் முதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரை ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படமாக மட்டும் இன்றி, சாதாரண மனிதரின் சாதனை பயணத்தை வெளிக்காட்டும் வாழ்க்கை பயணமாகவும் உருவாகியுள்ளது. குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.

 

சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி என இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை பார்க்கும் அனைவரும், ”இந்த படத்தை ஒரு முறையாக பார்த்து விடுங்கள், மிஸ் பண்ணிடாதீங்க” என்று மற்றவர்களிடம் நிச்சயம் சொல்லுவார்கள்.

 

அதற்கான நான்கு முக்கிய காரணங்களும் இருக்கின்றன. ஒன்று, ”உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது - இந்தப் படம் எவ்வளவு தாகத்துடன் உருவாகியுள்ளது என்பதே குறிப்பிட்டுப் பேச வேண்டிய விஷயம். நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இயக்குநர் சுதாவும் அவரது அணியும் தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம் செலவிட்டுள்ளனர். தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து அதை இன்று சூரரைப் போற்று இருக்கு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் சாரத்துக்கு உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.”

 

இரண்டாவது காரணம், “பரபரப்பான கதை - சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும்.”

 

மூன்றாவது, “தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் - அமேசான் ப்ரைம் வீடியோவுடன், இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது. உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறந்த இந்த அட்டகாசமான ஆக்‌ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது இன்னொரு காரணம்.”

 

நான்காவதாக, “சுதா மற்றும் சூர்யா, சொல்லி அடிக்கும் கூட்டணி - சுதாவின் நுட்பமும், சூர்யாவின்  திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யா, முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார். இந்த இயக்குநர் - நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது.”

Related News

7050

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery