Latest News :

VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - ராதாகிருஷ்ணன்
Tuesday November-17 2020

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

 

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்" தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கு இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது

 

ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது நேற்றைய(11.11.2020) அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த

T. ராஜேந்தர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது போல் பேசினார் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில்கூறுவதை தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்.

 

VPF க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நான் தான் தமிழ் சினிமா நன்மைக்காக பிரதமர் மோடி கார் முன்னே குதிப்பேன் என கூறிஅதிர்ச்சியூட்டினார் இது சம்பந்தமாக கெளரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது,

 

T.R.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் நலனுக்காக பிரதமர் காரின் முன்னால்கூட விழுவேன் எனபத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளாரே.

 

நானும் அந்த 45 நிமிட பேட்டியை பார்த்தேன் அதில் தயாரிப்பாளர்கள் நலன், பிரச்சினை பற்றி எதுவுமே பேசவில்ல சங்க தலைவர்பதவிக்க வேறு சங்கங்களில் தலைமைப் பொறுப்பில் இல்லாதவர்கள் போட்டியிட கூடாது என்கிற சங்க வீதியை பின்பற்றாதவர் 

மீடியாவை சந்திக்கிறபோது பொதுக்கூட்டமேடையில் பேசுவதுபோல் பேசுகிறார் அவர் பேசிமுடிக்கும்போது என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை.

 

எதுகை மோனை பேச்சு சினிமாவுக்கு பயன்படும் சங்க பணிகளுக்கு பயன்பாடாது என்பதை T.R.புரிந்துகொள்ள வேண்டும் டிக்கட் கட்டணத்தை பற்றி பேசுகிறபோது அவர் யாருக்காக பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் 

விநியோகஸ்தர்களுக்கா, தயாரிப்பாளர்களுக்காகவா? பொதுமக்கள் நலன் பற்றி பேசுகிறவர் அரசியல் கட்சிக்கு போகவேண்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மேடையை பயன்படுத்தகூடாது.

 

தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரான T.ராஜேந்தர் தேர்தலில் போட்டியிட கூடாதா?

 

வேண்டாம் என கூறவில்லை தயாரிப்பாளர்கள் தொழில் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்வது அதிகமாகதிரைப்படவிநியோகஸ்தர்களுடன்தான் அந்த அமைப்பின் உச்சபட்ச தலைமை பொறுப்பில் தற்போது T.R.இருக்கிறார் அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டு இங்கு தேர்தலில் போட்டியிடலாம். ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்வது இருதரப்புக்குமே ஆபத்தாக முடியும் - அவர் மீதான நம்பகதன்மை விமர்சனத்துக்குள்ளாகும்

 

VPF பற்றிய தெளிவான முடிவினை எந்த சங்கமும் கூறவில்லையே

 

தயாரிப்பாளர்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதால் இப்படி ஒரு கேள்வி வருகிறது தியேட்டர் உரிமையாளர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் கூட்டு கொள்ளை நடத்திவந்தது அம்பலத்திற்கு வந்துவிட்டது தேர்தல் முடிந்தபின் VPF கட்டணத்தை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிப்போம் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் VPF கட்டணம் அறவே ரத்து செய்யும் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கநிதி நிலை பலப்பட வாய்ப்பு உண்டு.

 

VPF கட்டணத்துக்கும் சங்கநிதி ஆதாராத்திற்கும் என்ன தொடர்பு

 

ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ரூபாய் டிஜிட்டல் புரவைடர்களுக்கு கட்டணமாக தயாரிப்பாளர்கள் மூலம் வருமானமாக கிடைக்கிறது இதனை முழுமையாக ரத்து செய்கிறபோது தயாரிப்பாளர்களிடம் குறைந்தபட்சம் 5% சங்க அறக்கட்டளைக்கு சேவை கட்டணமாக பெற்றாலே 10 கோடி ரூபாய் கிடைக்கும் பிற வணிக ரீதியான வருவாய்மூலம் 20 கோடி ரூபாய் கிடைக்கும் திட்டமும் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

Related News

7058

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery