‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சி.சத்யா, தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சன 2’ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதை போட்டுக்கோண்டுள்ள சத்யா, 6 ஆண்டுகளில் 15 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர், தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.
ஆண்டுக்கு மூன்று நான்கு படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில், 6 ஆண்டுகளில் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே ஏன்? என்று அவரிடம் கேட்டதற்கு, தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் தனி ஒருவராக் இருந்து, சத்யாவே மெனக்கெட்டு அவுட் புட் கொடுப்பாராம். அதனால் தான் வரும் படங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், தேர்வு செய்து சில படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன், என்று கூறுகிறார்.
அதுமட்டும் அல்ல, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்பும் சத்யாவுக்கு கிடைத்ததாம். ஆனால், படத்தில் ஒப்பந்தமாவது பெரிதல்ல, சரியான நேரத்தில் பாடல்களும், பின்னணி இசையும் தர வேண்டும், தான் இசையமைக்கும் அனைத்து பணிகளையும் தானே நேரடியாக செய்வதால், சிறிது காலதாமதம் ஆகும் என்பதாலேயே, அந்த படங்களை சத்யா நிராகரித்துள்ளார்.
ஆனால், இனி அதுபோல எந்த படத்தையும் தவிர்க்கும் எண்ணம் சத்யாவுக்கு இல்லையாம். தற்போது தனது பணியை வேகமாக்கியுள்ள சத்யா, முன்னணி ஹீரோக்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுக்கு அவர்கள் கேட்கும் நேரத்தில் பாடல்களை கொடுக்க தயராகிவிட்டதோடு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.
தற்போது விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகும் ‘பக்கா’ படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கரகாட்ட பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாம். இதுவரை தமிழ் சினிமாவில் வந்த கரகாட்ட பாடல்கலைக் காட்டிலும் ரொம்ப வித்தியாசமாக வந்துள்ள இப்பாடல் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் உள்ளதாம்.
மேலும், பல படங்களுக்கு இசையமைத்து வரும் சத்யா, இனி எத்தனை படங்கள் வந்தாலும் அத்தனை படங்களையு ஏற்றுக்கொண்டு பரபரப்பாக பணிபுரியும் மூடுக்கு வந்துவிட்டாராம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...