Latest News :

”இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த” - தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கவனம் பெற்ற சிங்காரவேலன்
Wednesday November-18 2020

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர் இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்க வளர்ச்சிக்கு, உறுப்பினர்கள் நலனுக்காக எந்த முன்முயற்சியும் எடுக்காதவர் என்கிற அதிருப்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

 

இராம நாராயணன் தலைவராக இருமுறை பதவியில் இருந்த போது செயலாளராக பதவியில் இருந்தவர் சிவசக்தி பாண்டியன் அவரது பதவி காலத்தில் உறுப்பினர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை சமரசம் இன்றி அணுகியவர் எவருக்கும் பாதிப்பு இன்றி சமரச தீர்வுகாண முயற்சித்தவர் என்கிற நற்பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது ((இருந்தபோதிலும் பல நேரங்களில் அதிகார தொனியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் என்கிற கெட்ட பெயரும் இவருக்கு இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது ))கடந்த ஐந்தாண்டுகளில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாதது இவருக்கு பலவீனமாக உள்ளது.

 

P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இருவரையும் அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்களுக்கான ஆதரவு அலை தனிப்பட்ட முறையில் இல்லை அணியின் சார்பில் கிடைக்க கூடிய வாக்குகள் இவர்கள் இருவரையும் கடும் போட்டியாளராக களத்தில் நிறுத்தவில்லை.

 

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட R.K.சுரேஷ் கடும் போட்டியாளராக களத்தில் உள்ளார் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் தனிப்பட்ட முறையில் வாக்களர்களை சந்தித்து கரன்சி கவனிப்பு மூலம் கவர்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.

 

சுயேச்சையாக போட்டியிடும் மதியழகன் தேர்தல் களத்தில் இருக்கிறாரா என பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது.

 

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் அனைவரது நலனுக்காக போராடுவேன் முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த காலங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பாக கதிரேசன், கலைப்புலிதாணு இருவரும் சங்கத்துக்கு வர வேண்டியவருமானத்தை மடைமாற்றிவிட்டதையும், சங்கத்தின் உரிமைகள், கௌரவம் பறிபோன போது தடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டு வருவது கதிரேசனுக்கு எதிரான அலையை அதிகரித்து வருகிறது.

 

தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன்அறிவித்து உள்ளது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையையும், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என விசாரித்தபோது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் இருக்கும்.

 

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும் அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும் சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றிபெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்.

 

தேர்தல்கள நிலவரம் பற்றி மூத்த தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது சிங்காரவேலன் ஆர்வக்கோளாறில் போட்டியிடுவதாகவே நினைத்தோம். எங்களிடம் வாக்கு கேட்க வந்தபோது அவரது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள் அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை கேட்டபோது எங்களுக்கு பிரமிப்பு உண்டானது ”இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த" என கேட்க வேண்டியதாயிற்று புதிய இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தருவதில் தவறில்லை என்றனர்.

Related News

7063

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery