தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக களம் இறங்க உள்ள நிலையில், தனக்கு ஆரம்பக்கட்டத்தில் உதவி செய்ததை கூட எண்ணி பார்க்காமல், அவருக்கு எதிராக சூரி செய்தது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரிக்கு ‘வெண்ணிலா கபடக் குழு’ திரைப்படம் தான் அவருக்கு காமெடி நடிகர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சூரி, தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது சூரி போலீசில் புகார் அளித்தார். ரமேஷ் குடவாலா தன்னிடம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது ரமேஷ் குடவாலாம் மீது பண மோசடி வழக்கு தொடர்ந்திருக்கும் நடிகர் சூரிக்கு, இதே ரமேஷ் குடவாலா தான், மிகப்பெரிய உதவி ஒன்றையும் செய்திருக்கிறார்.
அதாவது, வெண்ணிலா கபடி குழு படம் வெளியான போது, சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டை லீசுக்கு பேசி சூரி முடித்திருக்கிறார். ஆனால், அந்த வீட்டை பேசி முடித்த தரகர், சூரியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டாராம். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவிடம் குறையிட, அவர் தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு சூரி இழந்த 5 ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்தாராம்.
ஆனால், காலம் போற போக்கில், எந்த சூரிக்கு உதவி செய்தாரோ அதே சூரி தான் தற்போது அவர் மீதே பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார், என்று விஷயம் தெரிந்தவர்கள் முனு முனுத்து வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...