பிக் பாஸின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கு சுமார் 40 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்களை காட்டிலும் இந்த 4 வது சீசன் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஹைலைட்டான காதல் எப்பிசோட் தற்போதைய நான்காவது சீசனில் தொடங்கப்பட்டாலும், அதிலும் விறுவிறுப்பு இல்லாததால், தற்போது 48 மணி நேரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும், சுவாரஸ்யம் இல்லாததால், புதிய போட்டியாளரை பிக் பாஸ் குழு களம் இறக்கப் போகிறது.
தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் மன்னனாக மட்டும் இன்றி அதிரடி மன்னனாகவும் திகழ்பவர் பாலா தான். அவருக்கு சரியான போட்டியாளராக எந்த ஒரு போட்டியாளரும் இல்லாததால், அவருடன் ஈடுகொடுக்கும் சரியான போட்டியாளர் ஒருவரை களம் இறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சீரியல் நடிகர் ஆசிம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களம் இறங்க உள்ளார். இவர் சீரியல் நடிகராக மட்டும் இன்றி சமூக அக்கறையுடன் பரபரப்பாக பேசவும் செய்வார். பல பேட்டிகளில் காரசாரமான தனது பேச்சுக்களால் கவர்ந்தவர், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஷிவாணிக்கு ஜோடியாகவும் சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி, அந்த சீரியல் மூலம் ஷிவாணி மற்றும் ஆசிம் குறித்து கிசுகிசுக்களும் எழுந்தது.
இப்படிப்பட்ட ஆசிம், பிக் பாஸ் வீட்டுக்குள் களம் இறங்கினால், பாலாவின் காதல் மற்றும் அதிரடி விளையாட்டுக்கு நிகராக ஆசிம் விளையாடுவார், என்று ரசிகர்கள் கருத்து கூற, அதன்படி விஜய் டிவி-யும் ஆசிமை போட்டியாளராக விரைவில் களம் இறக்கப் போவதாக கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...