விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக ஏ.ஆர்.ராஜேந்திரன், என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, படத்திற்கு இடைக்கால தடையும் வாங்கிவிட்டார்.
முகம் தெரியாத இந்த ராஜேந்திரன், தான் தயாரிக்க இருந்த ‘மெர்சலாயிட்டேன்’ படம், விஜயால் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றும் நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில், அறிமுக நடிகர் ஒருவர் இருப்பது போன்ற போஸ்டரையும் பத்திரிகையாளர்களுக்கு பி.ஆர்.ஓ மூலம் ராஜேந்திரன் அனுப்பியுள்ளார்.
அதில், கென் மீடியா கருணாஸ் வழங்கும் என்ற வாக்கியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், இந்த கென் மீடியா காமெடி நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் நிறுவனமாகும்.
எனவே, விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு, மூல காரணம் நடிகர் கருணாஸாக இருப்பாரோ!, என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...