தமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற லொஸ்லியா, தற்போது சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று உயிரிழந்தார். கனடாவில் பணியாற்றி வரும் மரியநேசன், இரவு தூங்கும் போது படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லும் வேலைகளில், குடும்பத்தார் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே சமயம், மரியநேசனின் மரணம் குறித்து பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக அவர் அதீத மதுபோதையினால் உயிரிழந்ததாகவும், அவர் படுக்கையில் நிர்வாணமாக இருந்ததாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், மரியநேசனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி லொஸ்லியாவின் உறவினர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடலை இலங்கை கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும். கொரோனா காரணமாக இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவரது இறப்பு இயற்கையானது. தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...