தமிழ் பிக் பாஸ் 4 வது சீசன் ஒளிபரப்பாகி சுமார் 40 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நிகழ்ச்சி பரபரப்பும் சுவாரஸ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் மோதல்களாலும் பெரிய சுவாரஸ்யம் இல்லாததால், தற்போது டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் எந்தவித விறுவிறுப்பும் இல்லை.
இதற்கிடையே, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாடக சுசித்ராவும் பெரிதும் கவனம் ஈர்க்காத நிலையில், ரசிகர்களின் குறைவான ஓட்டுகள் பெற்றதால் அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதில் சீரியல் நடிகர் ஆசிம் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே சுரேஷ் சக்கரவர்த்தி சில பரபரப்பான விஷயங்களை செய்ததோடு, நிகழ்ச்சிக்கான கண்டெண்டுகளையும் கொடுத்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவரை உள்ளே அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...