திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் உலகில் மட்டும் இன்றி திரையுலகிலும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், நடிகரும், தொழிலதிபருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், “உதயநிதி எனும் இளையசூரியனின் எழுச்சி திமுக-வின் மறுமலர்ச்சி” என்று வாழ்த்தியுள்ளார்.
நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இன்று அகவை 43-ல் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகளால் தமிழகமே வியப்படைந்திருக்கிறது. ஆனால், அது ஆச்சரியமானதல்ல. பல்வேறு போராட்டங்களையும், விமர்சனங்களையும் கடந்து தான், அண்ணா, கலைஞர் ஆகியோரை தமிழகம் புரிந்துக்கொண்டு போற்றியது. அவர்கள் வழியில் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பல போராட்டங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு தான் தன்னை நிரூபித்துள்ளார். போராட்டங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் தங்களது நெஞ்சுரத்தால் சோதனைகளை சாதனையாக்கிய தலைவர்கள் வழியில் வந்த உதயநிதியும், தன்னை திமுக-வின் இளையசூரியனாக நிரூபித்துள்ளார்.
சினிமாத்துறையில் தயாரிப்பாளராக நுழைந்து வெற்றிவாகை சூடியவர், கதாநாயகனாக களம் இறங்கி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றார். அரசியலில் நுழையும் போது “வாரிசு அரசியல்” என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், இப்போது அவரை விமர்சித்தவர்களே, “உதயநிதி தான் எதிர்கால திமுக” என்று வாழ்த்தும் அளவுக்கு தனது பணிகளை தீவிரமாகவும், சிறப்பாகவும் செய்து, திமுக-தொண்டர்களுக்கு மட்டும் இன்றி தமிழக மக்களுக்கே நம்பிக்கையளித்துள்ளார்.
சினிமாவில் உதயநிதி கண்ட வெற்றிகளை விட, அரசியல் உலகில் மாபெரும் வெற்றியை குவிக்க வேண்டும். இளையசூரியன் என்று பெயர் எடுத்திருக்கும் அவரை, திமுக-வின் மறுமலர்ச்சி, என்று தமிழகமே கொண்டாடும்.” என்று தெரிவித்துள்ளார்.
‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படம் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...