வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொதுபோக்கான காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருந்தாலும், தணிக்கையின் போது படத்தை பார்த்த பெண் சென்சார் அதிகாரிகள், “படம் நல்லா இருக்கு” என்று பாராட்டியுள்ளார்கள்.
இது குறித்து இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறுகையில், “18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். "ஏ"சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை.
இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோனவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் கூறினர், அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும். அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார். நிக்கி கல்லூரி மாணவி, இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்லாம் சந்திக்கிறாங்க, அவங்களுக்கு என்னலாம் நடக்குது, முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும்.
ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை, எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். சென்சார்லயும் "ஏ"க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம். சென்சார்லயும் பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு நல்லா ஜாலியா இருக்குன்னு தான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது. தங்கராஜ் சார்கிட்ட கதை சொன்னோம் அவருக்கு பிடிச்சிருந்தது. 18 பேர்க்கு அப்புறம் கௌதம் தான் இதை படமா கதையா பார்த்தாரு. கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு. இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது ஒரு பேய் படம். கதைக்கு ஏத்தா மாதிரி தலைப்பு வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை. நான் சரவணன் சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். கண்டிப்பா படத்துக்கு பெண்களும் வருவாங்க. படத்தோட பூஜையின் போது கார்த்திக் சார்கிட்ட இருந்து வாழ்த்து வந்ததா கௌதம் சொன்னார் அதுவே பெரிய விஷியம்தானே" என்று கூறினார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...