தொலைக்காட்சி ரசிகர்களின் நம்பர் ஒன் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ள பிக் பாஸின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்களைக் காட்டிலும் இந்த நான்காவது சீசனில் சுவாரஸ்யம் சற்று குறைவாக இருப்பதாக கருத்து நிலவி வரும் நிலையில், நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து, சுவாரஸ்யத்தை கூட்டும் வேலைகளில் தயாரிப்பு குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான எலிமினேஷன் ரவுண்ட் இந்த வாரம் உள்ளது. அதன்படி, இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். தற்போது எலிமினேஷன் பட்டியலில் சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், அரந்தாங்கி நிஷா ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார், என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த ஒருவர் யார்? என்ற ரகசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஜித்தன் ரமேஷ் எந்தவித ஈடுபாடும் காட்டாமல், அமைதியாக இருந்தது ஒரு பக்கம் இருக்க, அவருக்கான வாக்குகளும் குறைந்ததால், அவரை போட்டியில் இருந்து தயாரிப்பு குழு நீக்கியுள்ளது.
எனவே, இன்று ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதோடு, புதிய போட்டியாளர் குறித்த அறிவிப்பும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...