சிம்புவின் வாழ்க்கையில் வீசிய புயல் தற்போது பூங்காற்றாக மாறியுள்ளது. அதனால் பழைய சிம்பு போய், தற்போது புதிய சிலம்பரசன் டி.ஆர்-ஆக வலம் வருபவர், தனது படங்களை விரைவாக முடிப்பதில் தீவிரம் காட்டுவதோடு, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன்படி, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்தவர் தற்போது ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். இப்படத்துடன் பாதியில் கைவிடப்பட்ட ‘மஃப்டி’ படத்தையும் மீண்டும் தொடங்கி விரைவாக முடித்துக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிலம்பரசனின் இந்த திடீர் மாற்றத்தால் அவரது ரசிகர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியடைந்தது போல, அவரது குடும்பமும் குஷியடைந்திருக்கிறார்கள். அவர்களது இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக, சிலம்பரசனின் தாய், உஷா ராஜேந்திரன் அவருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட மினி கூப்பர் காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு உஷா ராஜேந்தர் வழங்கி, மகிழ்வித்து மகிழ்ந்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...