இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தேசிய விருது பெற்ற நடிகையுமான வித்யா பாலன், தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தவர், பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
பாலிவுட் தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்ட வித்யா பாலன், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ‘ஷேர்னி’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் வித்யா பாலனை அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்யா பாலன் நடித்து வரும் ‘ஷேர்னி’ படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் நடந்து வருகிறது. இதில் வித்யா பாலன் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாகவும், அதற்கு வித்யா பாலன் மறுப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் சினிமா மற்றும் அரசியல் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச்சர் விஜய் ஷா, ”நான் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு என்னை அழைத்தனர். ஆனால், என்னால் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன். மேலும், மகாராஷ்டிரா செல்லும் போது அவர்களை சந்திப்பதாக கூறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பல பேட்டிகளில் சினிமாவில் தான் சந்தித்த பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்து வித்யா பாலன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...