இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான வெற்றிப் படங்களின் பட்டியலில் இடம் பிடித்த ‘கே.ஜி.எப் சேப்டர் 1’ கன்னட சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்ததோடு, இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘கே.ஜி.எப் சேப்டர் 1’ படதை தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் சாதனைப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
ஹொம்பாளே பிலிம்ஸ் சார்பில் கன்னட சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் விஜய் கிரகண்தூர், ‘கே.ஜி.எப் சேப்டர் 1’ படத்தை எப்படி இந்தியா முழுவதும் வெளியிட்டாரோ, அதேபோல், ‘கே.ஜி.எப் சேப்டர் 2’ படத்தையும் கன்னடம் மட்டும் இன்றி பல இந்திய மொழிகளில் தயாரித்து வருவதோடு, புனித்ராஜ்குமார் நடிப்பில் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் உருவாகும் ‘யுவரத்னா’ படத்துடன் முன்னணி இயக்குநர் மற்றும் ஹீரோவை வைத்து மேலும் ஒரு படத்தை பல மொழிகளில் தயாரித்து வருகிறார்.
பிரம்மாண்ட திரைப்படங்களை பலர் தயாரித்தாலும், பல மொழிகளில் உருவாகும் மூன்று படங்களை தொடர்ச்சியாக இந்திய சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் தயாரித்ததில்லை. இத்தகைய புதிய சாதனையை நிகழ்த்தி, தனது சாதனை பயணத்தை தொடங்க இருக்கும் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர், தனது படங்களை மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட உள்ள விஜய் கிரகண்தூர், அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் வெளியிட உள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...