ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த சந்தானத்தின் படங்களில் மிக முக்கியமான படமாகவும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்ற படமாகவும் அமைந்தப் படம் ‘ஏ1’. அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கிய இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அவருடன் சந்தானம் கைகோர்த்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
‘ஏ1’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் ஜான்சன் - சந்தானம் கூட்டணிக்கு கோலிவுட்டிலும், ரசிகர்களிடமும் மாபெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைடில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘பாரீஸ் ஜெயராஜ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் பாபு படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார். ரோகேஷ் பாடல்கள் எழுத, சாண்டி நடனம் அமைத்துள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள படக்குழு, படத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...