தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக விளங்கும் பிக் பாஸ் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பி வந்தாலும், நிகழ்ச்சியில் பெரிய அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை, என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை பவித்ரா புனியா நான்கு பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை அவரது கணவர் தான் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் சீரியல் நடிகை பவித்ரா புனியா. ‘ஏ ஹை மொஹப்பதைன்’, ‘நாகின் 3’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான பவித்ரா புனியா, பிக் பாஸ் போட்டியில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை, என்று கூறிய பவித்ரா புனியா, தற்போது திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக கூறினார். அதே சமயம், தனது வருங்கால கணவர் பெயரை அவர் கூறவில்லை.
இந்த நிலையில், சுமித் என்ற தொழிலதிபர், பவித்ரா புனியா தன்னை திருமணம் செய்து மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பவித்ரா புனியாவுக்கும் தனக்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும், அவருடைய பெயரை நான் பச்சைக் குத்திக்கொண்டேன், என்றும் கூறியிருக்கும் அவர், பவித்ரா புனியா தனக்கு திருமணம் ஆனதை மறைத்து நான்கு பேருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓட்டல் ஒன்றில் நடிகருடன் பவித்ரா புனியா நெருக்கமாக இருப்பதை தான் பார்த்தேன். அவரது தவறான நடவடிக்கைகளை பல முறை மன்னித்திருக்கிறேன். ஆனால், இனி அவரை நான் மன்னிக்கப்போவதில்லை. அவர் என்னை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு, விருப்பம் போல வாழலாம், என்றும் அவர் கூறியுள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...