தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் வட சென்னை மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்தவர், மீண்டும் அதே வட சென்னையின் வாழ்வியலை மட்டும் இன்றி, அம்மக்களின் மிக முக்கியமான விளையாட்டுகளில் ஒன்றான குத்துச் சண்டைப் பற்றி சொல்லப் போகிறார்.
வட சென்னையில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்திற்கு ‘சார்பட்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக துஷாரா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜான் கோகேன், சந்தோஷ் பிரதாப், சபீர், கலையரசன், ஜான் விஜய், பசுபதி, அனுபமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
K 9 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்ய, த.ராமலிங்கம் கலையை நிர்மாணிக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் விதத்தில் அன்பறிவு அமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...