சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான கவின், சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது லொஸ்லியாவுக்கும் கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால், போட்டியில் இருந்து இருவரும் வெளியேறிய பிறகு தங்களது காதல் குறித்து எதுவும் பேசாமல், தங்களது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். அதன்படி, கவின் சில் படங்களில் ஹீரோவாக நடிக்க, லொஸ்லியாவும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அது காதல் திருமணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டைலிஷ் ஒருவரை கவின் காதலித்து வருவதாகவும், அவரை தான் அவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...