விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா பாதிப்பால் கடந்த 8 மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. அதே சமயம், படத்தை ஒடிடி-யில் வெளியிடப் போவதில்லை, திரையரங்குகளில் தான் வெளியிடுவோம், என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, திரையரங்கில் படம் வெளியான தயாரிப்பாளர் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி தொகை வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பங்கீட்டு தொகையில் மாற்றம் செய்ய வேண்டும், என்று ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திரைப்படங்களை ஒடிடி-யில் வெளியிடாமல் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும். கொரோனா பாதிப்பால் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்ததால், தற்காலிகமாக ஒடிடி-யில் வெளியிட வேண்டுமே தவிர, அதையே நிரந்தரமாக பின்பற்றக் கூடாது.
மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும், என்று நான் கூறினேன். அதன்படி படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என்று அறிவித்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் முடிவை வரவேற்கிறேன். ‘மாஸ்டர்’ படத்தை ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால், அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆக, ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...