ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் 232 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கமலின், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்தை தமிழ்ப் படமாக மட்டும் இன்றி, தென்னிந்திய திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், அதற்கான தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பகத ஃபாசில், ‘விக்ரம்’ படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து மேலும் சில தென்னிந்திய டாப் நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.v
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...