கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொள்பவர்களுக்கு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைத்துவிடுவது. அந்த வகையில், லொஸ்லியா, கவின், தர்ஷன் உள்ளிட்ட பலர் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களாக விரைவில் அறிமுகமாக உள்ளார்கள்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மக்களுக்கு அதிகம் பரிச்சையம் இல்லாத பலர் போட்டியில் பங்கேற்று, மக்களிடம் பிரபலமாகியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் சம்யுக்தா.
மாடலிங் துறையில் உள்ள சம்யுக்தாவுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியால் தனி ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இதனால், அவர் பெயரில் பல ஆர்மி குரூப்கள் உருவாகி வருகிறது. சுமார் 50 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சம்யுக்தா, கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் விஜய் சேதுபதியின் படத்தில் கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தில் ஏற்கனவே ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வர, மூன்றாவது நாயகியாக சம்யுக்தா ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு இது தான் முதல் திரைப்படம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...