விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். அதன் பிறகு, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 6000285’ படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், அப்படத்தை தொடர்ந்து ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், ஜெய்க்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்தது. அதன்படி, ‘வாமனன்’, ‘கோவா’, ‘அவள் பெயர் தமிழரசி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் ஜெய், அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே நடிகை அஞ்சலியை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருந்த நிலையில், ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அஞ்சலி அவரைவிட்டு விலகியதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, மீண்டும் அஞ்சலியுடன் இணைந்த ஜெய், தான் நடிக்கும் படங்களில் அஞ்சலியை ஹீரோயினாக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், சில மாதங்களில் மீண்டும் ஜெய், அஞ்சலி உறவில் விரிசல் ஏற்பட, தற்போது அவர்கள் பேசிக்கொள்வதில்லை, என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய் வேறு ஒரு நடிகையுடன் காதலில் இருப்பதாகவும், அந்த நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் நடித்துள்ள வெப் சீரிஸ் டிரிபிள்ஸ். இதில் ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பின் போது ஜெய்க்கும், வாணி போஜன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.
அதே சமயம், வாணி போஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அவர் தனது திருமணத்தை மறைத்து தான் சினிமாவில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...