தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். ‘ராஜா ராணி’ சீரியலில் சிறு வேடத்தில் நடித்தவர், ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பிரபலமானர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீரியல்களில் நடித்து பிரபலமான சித்ரா, திடீரென்று விதவிதமான தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால், அவர் திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
மேலும், சித்ராவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவரது இந்த தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
நட்சத்திர ஓட்டலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் அவரது தற்கொலைக்கு பின்னணியில் பல ரகசியங்கள் மறைந்திருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...