’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலம் சித்ரா, நேற்று இரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு, ஓட்டலில் ஒதுக்கப்பட்டுள்ள தனட்து ஓய்வு அறைக்கு அதிகாலை 2.30 மணிக்கு சென்றவர், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவர், அவருடன் ஓட்டல் அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார். பிறகு அவர்களுக்குள் ஏதோ மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தான் உடை மாற்ற வேண்டும், வெளியே இருங்கள், என்று ஹேமந்தை சித்ரா வெளியேற்றியுள்ளார்.
நெடுநேரம் ஆகியும் சித்ரா அறையில் கதவை திறக்காததால், ஓட்டல் ஊழியர்களிடம் ஹேமந்த் விஷயத்தை சொல்ல, அவர்கள் அறையின் மற்றொரு சாவியை போட்டு கதவறை திறந்து பார்த்த போது, சித்ரா அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவரது உடலை பார்த்த போது, அவரது மரணம் கொலையாக இருக்குமோ, என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது முகத்தில் இரண்டு இடத்தில் காயங்கள் இருப்பதோடு, தூக்கிட்டு கொண்டதற்கான அடையாளம் கழுத்துப் பகுதியில் இல்லை, என்றும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, சித்ராவின் மரணத்தை தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்காமல், சந்தேக மரணம் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரிக்க வேண்டும், என்று திரையுலக பிரபலங்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...