மம்மூட்டி - நயந்தரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப் படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் சித்திக் இயக்குகிறார்.
இதில் ஹீரோவாக அரவிந்த்சாமி நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃபதாப் ஷிவ்தாசானி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...