மலையாள நடிகையான பிரியாலால், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஜீனியஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பிறகு பட்டப்படிப்பிற்காக லண்டன் சென்றவர், தற்போது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியாலால் ‘குவா கோரிங்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
ராம்கோபால் வர்மாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மோகன் பம்மிடி இயக்கியிருக்கும் இப்படம், கல்லூரி காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக சத்தியதேவ் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியாலால் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
’ஜீனியஸு’- க்கு பிறகு தனக்கு தமிழில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வந்த போது படிப்பை முடிக்க வெளிநாட்டில் இருந்ததாலும், தெலுங்கு படம் நடித்து முடிக்க வேண்டி இருந்ததாலும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்த முடியாமல் போனதில் வருத்தமடையும் இந்த மலையாள மங்கை இனி எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டேன், தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசையும் லட்சியமும், என்கிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...