Latest News :

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த சிம்ரன்
Friday December-11 2020

தமிழ் சினிமாவில் சமீபத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான இப்படம், விமர்சன ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றதோடு, 3 தேசிய விருதுகளையும் வென்றது.

 

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற பல முன்னணி நிறுவனங்களும், நடிகர்களும் முயற்சித்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.

 

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.

 

Prashanth

 

இந்த நிலையில், ‘அந்தாதூன்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரமான தபு கதாப்பாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இது குறித்து கூறிய சிம்ரன், “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ’அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக  இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார்.

Related News

7114

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...