ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.ஜே.எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இங்கிலிஷ் படம்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல், பின்னணி இசை நௌசாத்.
இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் கூறுகையில், “இத்திரைப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட, அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார். எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது, அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம்.
இப்படம் ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும். இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார். அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.” என்றார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...