ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
பிரியா ராமன், சபனா, கார்த்திக் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்து வந்த ஜனனி சமீபத்தில் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தொடரின் நாயகனாக கார்த்திக் ராஜும் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜீ தொலைக்காட்சியே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ‘செம்பருத்தி’ ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், செம்பருத்தி தொடரில் இருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உலா வருகிறது. அந்த வகையில், சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததும் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியாதாக கூறப்படுகிறது. மேலும், செட்டில் சக நடிகர்களை மதிக்காமல் அவர் ஓவர் டார்ச்சர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி பல காரணங்கள் உலா வந்தாலும், அவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த இருப்பதால் தான், சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எது உண்மை என்று, கார்த்திக் ராஜ் விளக்கம் கொடுத்தால் தான் தெரியும்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...