பிரபல தொழிலதிபரும், மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அல்டாப் அகமது பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘இயேசுவின் 12 சீடர்கள்’. இயேசுவின் அதிசயங்களையும், அவரது 12 சீடர்களின் வாழ்வியலையும் சொல்லும் இப்படம் 100 நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.
‘காதல் கிறுக்கன்’, ‘கிரிவலம்’, ‘ரோஜா ஐபிஎஸ்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கும் அல்டாப் அகமது தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களை இந்தியா முழுவதும் விநியோகம் செய்துள்ளார். தற்போது அவர் தயாரிக்கும் ‘இயேசுவின் 12 சீடர்கள்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக உருவாக உள்ளது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் அல்டாப் அகமது கூறுகையில், “இயேசுவின் 12 சீடர்கள் " என்று பெயரிட்டு நாங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில் அந்த 12 சீடர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த படத்தை என்னுடைய மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறேன். 100 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ் தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் உருவாக்க உள்ளோம். இயேசுவின் 12 சீடர்கள் பற்றி அறிந்து கொள்ளும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும்.” என்றார்.
அர்ஜூன், மம்மூட்டி ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘வந்தே மாதரம்’ படத்தை இயக்கிய நாகராஜ் இப்படத்தை இயக்குகிறார். முத்துராஜ் கலையை நிர்மாணிக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
வரும் ஜனவரி ஆங்கிலம் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...