Latest News :

ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் ‘அன்பறிவு’
Tuesday December-15 2020

எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினிகாந்த், அஜித்குமார், தனுஷ் என பல தலைமுறைகளாக பல தரமான படங்களை மாபெரும் வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். தற்போது பல திரைப்படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘அன்பறிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தை இயக்குகிறார்.

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறுகையில், “சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்  எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போதும் எங்களுக்கு மிகப்பெரும் பாரட்டையும், வரவேற்பையும் ரசிகரகளிடம் பெற்று தந்துள்ளது. எங்களுக்கு குவியும் பாரட்டுக்கள், மேலும் அழகான படைப்புகளை தர பெரும் ஊக்கமாக உள்ளது. நடிகர் ஆதி நடிப்பில் எங்களது அடுத்த படைப்பான ‘அன்பறிவு’ படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக குறுகிய திரைப்பயணத்தில் குடும்பங்களுக்கு பிடித்த நடிகராக ஹிப்ஹாப் ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அவரை உலகளாவிய ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றியிருக்கிறது. விநியோக களத்திலும் மிக நல்ல பெயர் பெற்றிருக்கிறார். ‘அன்பறிவு’ படம் அவரை தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும், இப்படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். 

 

இயக்குநர் அஷ்வின் ராம் முதன்முதலாக திரைக்கதையை கூறிய போது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளித்தது. கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அமசங்களும் நிறைந்திருந்தது. நடிகர் நெப்போலியன் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அமெரிக்கவில் செட்டிலாகிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயம், இப்படத்திற்காக அவர் இங்கு வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் கதாப்பாத்திரத்தை கேட்டவுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்து, முழுக்கதையையும் கேட்டு சம்மதம் சொன்னார். படத்தை  சுற்றி மிக நல்ல விசயங்கள் தொடர்ந்து நடக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுமென நம்புகிறோம். ” என்றார்.

 

இயக்குநர் அஷ்வின் ராம் கூறுகையில், “

 

மிகப்பெரும் நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் எனது முதல் படம் உருவாவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். தமிழ் சினிமாவில் பல்லாண்டுகளாக, தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தந்து வருகிறது  சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் “அன்பறிவு” திரைப்படம் உருவாவது எனது அதிர்ஷடமே. இப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும். இந்நேரத்தில் கதையை கேட்டு இப்படத்தை தயாரிக்க ஒத்துகொண்ட தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் அவர்கள், அர்ஜீன் தியாகராஜன் அவர்கள் மற்றும் செந்தில் தியாகராஜன் அவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஏற்கும் கதாப்பத்திரம் அனைத்து வயதினரையும் கவரும் இப்படம் அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.” என்றார். 

 

’சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் நாயகி காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். விதார்த் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டிவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். பொன் பார்த்திபன் எழுத்து பணியை கவனிக்க, தினேஷ் சுப்பராயன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.  

Related News

7127

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery